மீண்டும் தோற்றது காவலூரின் பாதீடு – தன்னதிகாரத்தை பயன்படுத்தி நடைமுறையாக்கிய தவிசாளர்!
Monday, December 8th, 2025
……
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாகவுள்ளது.
ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று (8)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில்
மீண்டும் இடம்பெற்றது.
இதன்போது வருமானம் ஏதும் இல்லாத நிலையில்
சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்கள் என
பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு
இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இன்நிலையில் மக்கள் நலனோ, தற்போதைய அவசர தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதாக அமையாத குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப் பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள்
பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.
இருந்தும் தவிசாளர் தனதி சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு பதீட்டை செயற்படுத்த உத்தரவிட்டிருந்தார்
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும்
தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.
குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.
இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ஈ.பி.டி.பியி. 4 உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்த்தாபித்திருந்தது.
ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தையும் சூட்சகமாக பெற்று சபையின் ஆட்சி அதிகாரத்தை தூர நோக்கற்ற வகையில் வசப்படுத்தியிருந்தது.
சைக்கிள் கட்சியின் தூர நோக்கற்ற இந்த ஆட்சி அதிகார மோகத்தால் சபையின் செயற்பாடுகள் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே உறுப்பினர்களின் ஒத்துழைப்பின்மையால் ஆட்டம் காண தொடங்கியது. இது மக்களுக்கி பெரும் அசௌகரியங்களையும் உருவாக்கியது.
அதன் வெளிப்பாடாக மக்கள் விருப்புக்கேற்ப அதிகளவான மக்கள் பிரதிநிதிகள் தமது வாக்கை விரயோகித்ததால் இன்று நடந்த பாதீட்டின் பெறுபேறுகள் சைக்கிள் கட்சியின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது.
இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பி 4, என்.பி.பி 3, வீடு 1,சங்கு 1 ஆகிய உறுப்பினர்களது வாக்குகள் பதியப்பட்டன.
ஆதரவாக சைக்கிள் கட்சியின் தவிசாளர் மற்றும் இரு உறுப்பினருடன்
உப தவிசளர் பதவிக்காக தமிழரசில் இருந்து நழுவிச் சென்றவரது வாக்குடன் 4 வாக்குகள் கிடைத்தன.
இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 5 வாக்குகளால் தொற்கடிக்கப்படுள்ளது.
உள்ளூரதிகா சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும்.
இதேவேளை குறித்த தோல்வியானது சபையின் ஆட்சி மாற்றமாக அமையாது விடினும் ஆட்சியாகர்களின் மீது மக்களுக்கு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளதை காட்டியுள்ளதாகவும் சில கட்சிகளதும் அதிகார மோகமும் தவிசாளர்களது இரு வருட தன்னதிகார மோக நம்பிக்கையுமே இந்த துர்ப்பாக்கிய நிலைகள் உருவாக காரணம் என்றும்.பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி வருத்தம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|
|


