மீண்டும் உயரும் மின் கட்டணம் – அதிர்ச்சியில் மக்கள்!
Wednesday, April 29th, 20262026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீடுகளைத் திருத்தம் செய்து, தேசிய கட்டமைப்பு செயல்பாட்டாளர் நிறுவனம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை, மின் உற்பத்திச் செலவு மதிப்பீடுகளைத் திருத்தம் செய்வதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இதன்படி, 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய செலவு மதிப்பீடுகளின் அடிப்படையில், மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் (அதிகரிப்பு) மேற்கொள்வது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைக் கோருவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே இறுதிக்கட்டத் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


