மின்வெட்டு – முதலில் ஒரு குரங்கு மீது பழி – தற்போது கடந்த அரசாங்கங்கள் மீது குறி – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
Tuesday, February 11th, 2025
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
துன்னாலையில் உயிரிழந்த 24 வயது இளைஞரின் உடல் புதைக்கப்பட்டது
வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தல் - அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் இன்ற...
|
|
|


