மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கருவி நிறுவனம் வலியுதுத்து!

Saturday, June 14th, 2025

ஏனைய பிரையைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்று வலுவுள்ளிருக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என
அருவி நிறுவனம்
வலியுறுத்தியுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்திய குறித்த அமைப்பின் நிர்வாகிகள்  மேலும் கூறுகையில் –

மாற்றுத் திறனாளியும் இந்நாட்டின் பிரையைகளே. அவர்களும் சகலதும் பெற்று உறுதியாக வாழ வேண்டும்.

ஆனால் எமது நட்டில் அத்தகைய ஒரு நிலையான பொறிமுறை இல்லாதுள்ளது.

குறிப்பாக பாடசாலைகள், தொழில் இடங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் அல்லது சேவை பெறும் இடங்களில் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகின்றது.

இதில் பொதுப் போக்குவரத்திலேயே அதிகளவு இடர்பாடுகள் ஏற்படுகின்றது. இதை குறித்த சேவை வழங்குநர்களே எமது நிலைமையை உணர்ந்து, உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து தீர்வுகளை தரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

குறிபாக சமூக சேவைகள் அதிகாதிகள் இதில் அதிக அக்கறை எடுத்து பொறிமுறையை உருவாக்கி சேவையை நாம் இலகுவாகவும் மனித நேயத்துடனும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் எமது வருமான ஈட்டல் மற்றும் பொருளாதாரத்துக்காக நாம் கருவி நிறுவனத்தின் ஊடாக பல உற்பத்திப் பொருட்களை செய்து சந்தைப்படுத்தி வருகின்றோம்.

அதற்காக எமது மாற்றுத்திறனாளிகள்  பலர்  வெளிக்கள பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் தற்போது எமது இயலமையை பயன்படுத்தி,  குறிப்பாக அருவி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே மோசடிகளை மக்கள் விளிப்புடன் எதிர்கொண்டு எமது வாழ்வியலை வலுப்படுத்துவது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: