மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது  தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – சுகாதாரத் துறை!

Monday, January 27th, 2025

பாடசாலை மாணவர்களுக்காக பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பென்சில் மற்றும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்காக வெவ்வேறு இரசாயனங்களும் உலோகங்களும் பயன்படுத்தப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மஹிந்த விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

அவற்றைக் கொள்வனவு செய்யும் போது இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ, தரமற்ற வர்ண பூச்சுகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வர்ண பூச்சுகளைத் தயாரிப்பதற்கென தர அளவுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தர பரிசோதனையின்றி இறக்குமதி செய்யப்பட்ட பல வகையான வர்ண பூச்சுகள் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

000

Related posts:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாணசபை இதுவரை மக்களுககு செய்தது என்ன? - வடக்கு முதல்வரிடம் மாகாணசபை ...
யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது - மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...
IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - ஜப்பானிய நிதிய...

நாடாளுமன்ற தேர்தல்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை 33 முனைகளில் போட்டி- 3 சுயேட்சைக் குழுக்களின் ம...
நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியம...
இந்திய - இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பார...