மாணவனின் 25 ஆயிரம் ரூபாய் முறைப்பாடு.. கொடுப்பனவு வீட்டுக்கானதா? நபருக்கானதா? சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு காலக்கெடு!

Thursday, December 11th, 2025

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் இரு நாட்கள் காலக்கெடு வழங்கி கடிதம் அனுப்பி உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்று முன்தினம் புதன்கிழமை மாணவன் ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

மேலும் தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வார்ந்து வருகின்ற தனது வயது 16 புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன் எனக் குறிப்பிட்டதோடு
தனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்க்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகிவிட்டது.

ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் அங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி கட்டாயத்தில் எனது தாயார் உள்ள நிலையில் தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது எனவே உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார் .

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை எனது தாயார் கிராம சேவையாளரிடம் தரும்படி, பதிவினை மேற் கொள்ளும் கேட்டார் அவர் மறுத்து விட்டார்.

குறித்த குடியிரிப்பில் வாழாத குடும்பங்காருக்கு கொடுத்துள்ளார் ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார் என தனது முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யால் பிராந்தி அலுவலகம் அரசாங்கத்தின் 25000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனிநபருக்கானதா என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது

Related posts:


லிட்ரோ எரிவாயுவின் விலை நிச்சயம் அதிகரிக்கும் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது தனிப்பட்ட ஆதா...
வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தலே அரசின் நிலைப்பாடு - ஜப்பான் அமைச்சருக்கு அமைச...