மட்டுவிலிருந்த காலி நோக்கி பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து , டிப்பருடன் மோதி விபத்து !

Saturday, May 24th, 2025

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து,முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இவ்விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்துள்ளனர்

குறித்த விபத்துச் சம்பவம் தொபட்ர்பில் மேலும் தெரியவருவது –

இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவரது சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: