மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 18th, 2026


கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் இன்று (18) தெரிவு செய்யப்பட்டது.

குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு யாழ் திவ்யமஹால் மண்டபத்தில் இன்று (18) இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையில் இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம் போராளிகளில் ஒருவனாக இருந்தவன்.
போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது.

போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன்.

ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது.

மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது.

ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.

இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து.

இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு  மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும்.

இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.

வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன்.

ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால்  அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0000

Related posts: