பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேண விசேட கமரா!

….
பொலிஸாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, பொலிஸாருக்கு உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, இலங்கையின் காவல்துறை விரைவில் அனைத்துப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உடலில் பொருத்தும் கெமராக்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணியில் இருக்கும்போது அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகளை இந்த கெமராக்கள் பதிவு செய்யும்.
இது, கையூட்டல் மற்றும் ஊழலைத் தடுக்கும். அத்துடன் இரு தரப்பினரும் சட்டவிரோதமாகச் செயல்படுவதைத் தடுக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப். யு. வூட்லர் கூறியுள்ளார்.
000
Related posts:
மாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன!
எந்தவொரு தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது - பிரதமர்!
உக்ரையின் அவ்திவ்கா பகுதியை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின...
|
|