பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள் – மேற்பார்வைக் குழு பரிந்துரை!

Sunday, November 16th, 2025


….
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு ஒரு தொகையை அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி, குறித்த மேற்பார்வைக் குழு இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது, குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இந்த நடவடிக்கையின் மூலம் பொலித்தீன் பயன்பாடு குறைகிறதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். 

மேலும், பொலித்தீன் பைகளுக்காகச் செலுத்த வேண்டிய தொகையை எந்தத் தரப்பினர் தீர்மானித்தனர் என்றும் குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். 

அதற்கு பதிலளித்த அதிகாரிகள், பொலித்தீன் பைகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்று வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர்
000

Related posts:

தொடரும் மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு - இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நில...
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
சில தனியார் பாடசாலைகள் பின்பற்றவில்லை - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் குற்றச்சாட்டு...

ஆபத்தான தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆயுள் காப்புறுதி - அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன!
மஹிந்த வெல்ல வேண்டும் என விரும்பியவர் பிரபாகரன்: கோட்டபய வெல்ல வேண்டும் என விரும்பியவர் அமைச்சர் டக்...
பொலிஸ் உத்தியோகத்தர் பிரசன்னமின்றி குத்தகை வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்த முடியாது - பொ...