பொதுத் தேர்தல் நிறைவு –  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட 27ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, November 18th, 2024

பொதுத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து இம்மாதம் 27 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால பாதீட்டுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடைக்கால பாதீட்டுத் திட்டம் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டாலும், தேர்தல் திகதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் இந்த கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

000

Related posts:

சில ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் முன்னெடுக்க...
ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் ...
வியாழன் அன்று அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதி நியமனம் - 120 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும்...