பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!…..

Monday, February 16th, 2026


லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னணி இடதுசாரித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய அன்னார், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான நியாயங்களை புரிந்து கொண்டிருந்ததுடன், கௌரவமான அரசியல் தீர்வுக்கான அவசியத்தினையும் வலியுறுத்திய ஒருவராவார்.

செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா மற்றும் செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் எஸ். தவராசா ஆகியோரும் இதன்போது பேராசிரியருக்கான தமது அஞ்சலியை தெரிவித்தனர்.

Related posts:

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...
வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க மாணவர்களுக்கு அனு...
இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - முன...