பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!
Thursday, February 13th, 2025
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்றைய தினம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி கொடுப்பனவுகள் சபை இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம், இன்றையதினம் 172,5795 குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. இவர்களுக்கு சுமார் 12,555,651,250 ரூபா அஸ்வெசும கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.
பயனாளிகள் இன்றையதினமே தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து தங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு - கடல்சார் சூழல் பாது...
எங்கள் மீது பொருளாதார தடைகள் விதித்தால் - சர்வதேசத்தை மிரட்டுகிறார் புடின்!
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழிவு - கல்வி அமைச்சு அறிவிப...
|
|
|


