புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் மோசடிகள் – கல்வியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
Wednesday, June 4th, 2025
பாடசாலைகளுக்கு புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் ஏற்படும் மோசடிகள் தொடர்பில் கல்வியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு எதிராக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன எச்சரித்துள்ளார்.
பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்ப்பதில் சில இடங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் முறைகேடுகள் இடம்பெற்றால் கல்வி அமைச்சின் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுள்ளார்
000
Related posts:
முன்னாள் அமைச்சரின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு!
வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து வெளிநாட்டு வல்லுநர்களின் முடிவுக்கு காத்திருக்கும் இலங...
முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது காங்கேசன்துறை துறைமுகம் - 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி...
|
|
|


