புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!
Wednesday, May 27th, 2026
……
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.
அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3 ஆம் வட்டார கடற்பரப்பில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியிருந்த நிலையில் காணாமல் போன தொழிலாளியின் உறவினர் ஒருவரால் அடையாளம் காட்டப்பட்டதை அடுத்து குறித்த சடலம் காணாமல் போன குருநகர் கடற்றொழிலாளியான வேலு உதயகுமார் என்பவரதி என்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த சடலத்தை சட்ட வரையறைகளின் பிரகாரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிகை எடுத்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.
000
Related posts:
|
|
|


