பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!
Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி (வயது 80) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில் இருந்த அவர் வீட்டு கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related posts:
எதனோலின் இறக்குமதிக்கு உடனடி தடை – நிதியமைச்சு!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்ப...
|
|
|


