பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து மூன்று பாம்புகள் மற்றும் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிப்பு!

Tuesday, July 22nd, 2025

குருநாகல் மாவட்டத்தில் உள்ள, போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வளாகத்திலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 3 வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன.  

அதன்படி, அந்தப் பகுதியில் பாம்புகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் மற்றும் ஊழியர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை, போகமுவ மத்திய கல்லூரியில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால், பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

000

Related posts: