பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு – மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து!
Tuesday, December 10th, 2024
பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மாணவர்கள் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பாடசாலை உபகரணங்களிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலையை கருத்தில்கொண்டு பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி!
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது - குத்தகை மற்றும் கடன் ...
|
|
|


