பாகிஸ்தான் முத்தொடரிலிருந்து விலகியது ஆப்கான்!

Sunday, October 19th, 2025


………
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள T20 முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக சிம்பாப்வே அணி பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 17 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டதையடுத்து, இந்த தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியிருந்தது.

அதன்படி, குறித்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்குப் பதிலாக சிம்பாப்வே அணி விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிம்பாப்வே அணி குறித்த தொடருக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்தரப்பு தொடர் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: