பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வெற்றி!
Tuesday, November 5th, 2024
அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அதன் தலைவர் மொஹமட் றிஸ்வான் அதிகூடுதலாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜொஸ் இங்லிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
000
Related posts:
கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!
வடக்கு பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் - ஆளுநர் தெரிவிப்பு!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் - கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான ...
|
|
|


