பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் பதவிகளிலிருந்து விலகல்!
Tuesday, October 15th, 2024
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்றது.
000
Related posts:
இலங்கையர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு!
எதிர்வரும் 03ம் திகதி தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிப்பு!
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|
|


