பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு – 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, January 23rd, 2025

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில் மரக்கறி  வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16/01/2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் (22/01/2025) நேற்றுவரை புதிய கட்டடத்திற்கு மறக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் நேற்றையதினம் வழக்கு இடம்பெற்றது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 31 ஆம் தேதி வரைக்கும் மரக்கறி சந்தை வழமையான  தற்போது இயங்கி வருகின்ற இடத்தில் இயங்க முடியும்.

குறித்த வழக்கில் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: