பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் !
Monday, April 21st, 2025
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது.
சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார்.
இந்தநிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைச் சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வர்தா"வின் தாக்கம் மன்னாரிலும்; எச்சரிக்கை!
உர தட்டுப்பாடு நீக்கப்படும் - நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
ஆசிரியர் கூகயீன விடுமுறை - யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!
|
|
|


