நுளம்புக்குப் புகை மூட்டிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!
Thursday, January 16th, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம் பொன்னம்மா (வயது 81) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த அவர் நுளம்புக்குப் பொச்சு மட்டையில் தீ வைத்தபோது அவரது சேலையில் தீ பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தைப் புதைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா!
தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்...
இலங்கை மக்கள் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து ஐ. நா.சபையி...
|
|
|
மார்ச் 31 முதல் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் பாவனைக்கு தடை -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அம...
ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய பல கோடி செலவு - பெறுமதிமிக்க சொத்துக்களுக்கு ...
நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் - சுவாச நோய் நிபுணர் சன...


