நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Friday, April 17th, 2026

நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. 10 பேர் கொண்ட குழுவினர் நீராட சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இருவரைக் காணவில்லை எனத் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் இருந்த மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பிரதேச மக்களும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் 50இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

இவர்களில் 24 இற்கு மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீந்தத் தெரியாததாலும், குளிப்பதற்கும் பொழுதுபோக்குவதற்கும் மிகவும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்றமையினால் இந்த துயர சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

000

Related posts: