நாட்டை உலுக்கிய கோர விபத்து – மீட்பு பணிக்கு உலங்கு வானூர்திகள்!

Friday, September 5th, 2025



எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு உலங்குவானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். 

மேலும் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு உதவும் வகையில் விமானப் படையின் உலங்குவானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

படுகாயமடைந்தவர்களை உலங்குவானூர்திகள் மூலம் கொழும்புக்கு சிகிச்கைக்காக அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. .

மேலும் விபத்து தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts: