நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை !………

Saturday, October 4th, 2025


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு  இன்று (04) மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, பலத்த மழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

000

Related posts: