நாடாளுமன்ற தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!
Friday, December 6th, 2024
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 690 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இதுவரை 106 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளன.
அத்துடன் தேசிய பட்டியலில் அறிவிக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு ...
|
|
|
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – அதிக விலையில் விற்பனை செய்தால் ...
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் - வலுச் சக்தி அமைச்சு நம்...
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு உள்ள தடைகளை நீக்குவது குறித்து ஜனாதிபதி விசேட...


