குளங்களை புனரமைக்க முதற்கட்டமாக 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு – விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2024

வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பதற்காக 50மில்லியன் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இன்றையதினம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்ட நிகழ்வில் வன்னி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 94 குளங்களை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

எமது கோரிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இன்றைய, நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள்  விவசாயிகளை அழைத்திராத போதிலும், கோரிக்கை முன்வைத்து வெற்றி கிடைத்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எம்மிடம் அடிக்கடி கூறுவதுபோன்று சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கமைய, நாம் இன்றைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருந்தோம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளைமுதல் முழமையான கற்றல் செயற்பாடகள் ஆரம்பம் - நோய்...
பொதுமக்களிடம் பணம் பெற்ற தரகர்கள் பொது பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவி...
நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – யாழ்...