நல்லூர் பிரதேச உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Monday, March 17th, 2025
தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் நல்லூர் பிரதேச உள்ளூராட்சி சபையினை ஆளும் அதிகாரத்தை வென்றெடுக்கும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் தேர்தல் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்டவர்களுடனான கலந்துரையாடலில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச சபையை வெற்றி பெற்ற ஈ.பி.டி.பி. கட்சியினால் அந்தப் பகுதியில் ஏராளமான உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று எதிர்காலத்திலும் வாய்ப்பு கிடைக்கும்போது பல்வேறு மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி - டக்ளஸ் தேவானந்தா!
பாதீட்டின் பரிந்துரைகள் பலன்தரப்போவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
நீதி அமைச்சர் செம்மணி வருகை - கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய வாழும் உறவுகள்
|
|
|


