நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திற்குள் நூழைந்த இராணுவத்தின் வாகனம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.
இதன்போது நல்லூர் ஆலய முன் வாயிலால் திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் திருவிழா காலத்தில் குறித்த பகுதியில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் வாகனத்தை தவிர வேறு எந்த வாகனத்துக்கும் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் பாதணிகளுடன் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதேநேரம் கடந்த வருடம் திருவிழாவின்போதும் பௌத்த பிக்கு ஒருவர் வாகனத்தில் நல்லூர் வளாகத்திற்குள் சென்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|