நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை – போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர்!
Tuesday, January 7th, 2025
பேருந்து பயணத்தின் போது நடத்துனர் மிதிபலகையில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, இனிமேல் மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து பயணத்தை முன்னெடுப்பதில் காணப்படும் போட்டித்தன்மை காரணமாக சில நடத்துனர்கள் அவதானமின்றி மிதிபலகையில் பயணிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
000
Related posts:
குடாநாட்டில் 35 ஆயிரம் குடும்பங்களுக்கு வறட்சி உதவி - யாழ். மாவட்டச் செயலர் தகவல்!
தனியார் ஊழியர்களுக்கு வழமை போன்று சம்பளத்தை வழங்க வேண்டும் - தொழிலாளர் ஆணையாளர் நாயகம்!
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – இதுவே தனது நிலைப்பாடு என ஜன...
|
|
|


