Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_9775fb389c4ceb24f30e526072b19023, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து! - EPDP NEWS

தோழர் தேவானந்தாவின் அரசியல் இருப்பு அவசியமானது.- மாவைகலட்டியில் வலியுறுத்து!

Monday, June 15th, 2026


~~~~

மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகார பலத்தினை மீண்டும் மக்கள் வழங்குவார்கள் என்று ஈ.பிடி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கையை வெளியிட்டார்.

வலி வடக்கு மாவை கலட்டி, உதயதாரகை விளையாட்டுக் கழகத்தினால் நேற்று(14.06.2026) நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாவைகலட்டி கிராமம் மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடுகின்றபோது, எமது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, ஏற்பட்டுள்ள தற்போதைய வளர்ச்சி மகிழ்ச்சியளிப்பதாகவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் இந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவரும் தமது உரையில், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கடந்த கால மக்கள்நலச் செயற்பாடுகளை நினைவுபடுத்தியதுடன், அவர் அரசியலில் தொடர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் ட...
வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்க...