தொடர் மழை – கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் அனலைதீவில் உயிரிழப்பு!

Friday, December 12th, 2025


……..
அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவன் இன்று (12) நாலை 5.45 மணிதளவில் இடம்பெற்றுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்   புகாரளிக்கப்பட்டுள்கது.

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய ஆளுகைக்குள்  இருக்கும் அனலத்தீவு, வடாரம் 5 இல் வசிக்கும் ஜஹா சுப்பையா நளினி என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்துவருக் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களை சந்தித்துவரும் நிலையில் நீர் நிலைகளும் நிரம்பி இருக்கின்ற சூழலில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதேநேரம் தகவலின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: