தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!
Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, இன்றையதினம்(17) காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.
இந்தநிலையில், இன்றையதினம் காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் களத்தல் சற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததுடன், காணி அளவீட்டு பணிகளும் தாமதமாகியிருந்தன.
தொடர்ந்து நிலவிய குழப்ப நிலையை அடுத்து, தற்போது காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது,
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|
|


