தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு – 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு!
Monday, October 21st, 2024
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது.
ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (19) 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.
அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது
000
Related posts:
இலங்கைக்கு கடன் அற்ற உதவிகளை வழங்க ஜப்பான் நடவடிக்கை!
ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை!
வேலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் - அமைச்சரின் அமைச்சர் மனுஷ நாணயக்கார விசேட அறிவிப்பு!
|
|
|


