தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனா பெண்கள் சாம்பியன்!

Saturday, February 8th, 2025

இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது.

இப்போட்டி நேற்று (07.02.2025) கொழும்பு றேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மகாஜனக் கல்லூரியை எதிர்த்து குருதாகல் மலியதேவ மகளிர் கல்லூரி மோதியது. இப்போட்டி ஆட்டநேர நிறைவில் 1:1 என சமநிலையானது.

வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் மகாஜனக் கல்லூரி 3:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.

Related posts:

2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அம...
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்கள...
விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் - ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச...