தேசபந்து குற்றவாளி என அறிவிப்பு!

Tuesday, July 22nd, 2025

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து குற்றவாளி என நாடாளுமன்றில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன  அறிவித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழு விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேசபந்து தென்னக்கோன் குற்றம் இழைத்துள்ளதாக நாடாளுமன்றில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குமாறு விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்காக மூன்று பேர் அடங்கிய ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் பீரித்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஆணைக்குழுவினர் தேசபந்து தென்னக்கோன் ஓர் குற்றவாளி என அறிவித்துள்ளது.

தேகபந்து அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: