துவிச்சக்கர வண்டியால் ஏற்பட்ட விபத்து – மருதனார்மடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று மோட்டார் சைக்கிள் விபத்து!

Wednesday, September 10th, 2025


……
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப்பகுதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளானது.

குறித்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் –

துவிச்சக்கர வண்டி ஒன்றில் சென்றவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது.

அதன் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து  வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: