தீவக மாணவர்களுக்கு ஊர்காவற்துறையில் இலவச கருத்தரங்கு !
Wednesday, August 6th, 2025
தீவக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வருகின்றது .
இதன் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்கான இலவச கல்வி கருத்தரங்கு யாழ் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மண்டபத்தில் இன்று காலை முதல் தீவக கல்வி வலய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கி வைக்கபட்டதோடு
மங்கல விளக்கேற்றி மாணவர்களுக்கான இலவசக்கல்வி கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இதன் பொழுது மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் லாவண்ஜா சுகந்தன் , தீவக வலய கல்வி அதிகாரிகள், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் தயாரூபன் , வளவாளர்கள் ,
மாணவர்கள் , ஆசிரியர்கள்,பிரபல சட்டத்தரணி தேவ சேனாதிபதி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஏனைய கல்வி வலயங்களிலும் அதனை தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


