திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா அன்பளிப்பு!
Wednesday, October 23rd, 2024
நாடளாவிய ரீதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங் இந்த உதவித் தொகையை உத்தியோகப்பூர்வமாகக் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதற்கும் வெள்ளத்தடுப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கால வெள்ள நிலைமைகளைத் தடுப்பதற்கும், அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்கும் பின்பற்றக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
|
|
|


