திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
Friday, November 8th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக் கூடாது. மேலும் வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்கு கேட்க முடியாது. வீடு வீடாகச் செல்ல முடியாது என அனைத்து வேட்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அது சட்டவிரோத செயலாகும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
டெங்கு நோயின் தாக்கம்: அனைத்து அரச நிறுவனங்களிலும் பரிசோதனை!
யாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய பலர் தலைமறைவு!
புதிய வர்த்தகப் போர் - எஃகு, அலுமினியம் மீது 25% இறக்குமதி வரியை அறிவித்த ட்ரம்ப்!
|
|
|


