தயார் நிலையில் இலங்கையின் விமான நிலையங்கள்!

Tuesday, June 24th, 2025

கட்டார் மற்றும் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பயணிகள் விமான நிறுவனங்களின் எந்தவொரு அவசர தரையிறக்க கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய, தயார் என இலங்கை அறிவித்துள்ளது.

இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்கள் தயாராக இருப்பதாக, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.

வளைகுடாவின் சில பகுதிகளில் அதிகரித்த பிராந்திய பதற்றங்கள் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையகம் தெரிவித்துள்ளது.

000

Related posts: