தமிழ் மக்களின் தேசிய தலைவருக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Friday, October 4th, 2024


…..
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் மக்களின் தேசியத் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
மலர்மலை அணிவித்து நினைவு கூர்ந்தார்

இதனிடையே மூத்த இடதுசாரித் தலைவர் அமரர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியார்  வள்ளியம்மை அம்மையாரை சந்தித்த ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அம்மையாரின் சுகநலன் தொடர்பில் கேட்டறிந்தார்.

அம்மையாரின் கணவரான மூத்த இடதுசாரி தலைவர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள், தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை அமரர் கதிரவேற்பிள்ளையின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: