தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பு – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, February 9th, 2025


~~

அச்சு ஊடகத் துறையில் ஆழமான தடங்களை பதித்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு, தமிழ் ஊடகத் துறைக்கு பாரிய வெற்றிடத்தை உருவாக்கி இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“அமைதியான அணுகுமுறைகளையும் ஆழமான கருத்தியலையும் கொண்டிருந்த அமரர் பாரதி அவர்கள், ஊடக அறத்தின் வழிநின்று அனைத்து தரப்பினருடனும் உறவுகளை பேணியவர்.

எமது கருத்துக்களில் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியவர்.

அன்னாரின் இழப்பு, தமிழ் ஊடகத்துறையையும் தாண்டி தமிழ் பேசும் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...
சட்டவிரோத மணலைக் கொண்டு சென்ற குற்றத்துக்காக அடையாளப்படுத்தப்படும் வாகனங்களைக் கறுப்புப் பட்டியலில் ...