தபால் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிக வாக்காளர் அட்டைகள் தேக்கம் – மணியந்தோட்ட வாக்காளர் மத்தியில் குழப்பம்!
Wednesday, November 13th, 2024
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மணியன் தோட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதேச உப தபால் நிலையம் ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்கப்படாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது
தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் வாக்காளர் அட்டைகளை வழங்கும்போது விதிமுறைகளை மீறி நடந்து கொண்டமையால் கடமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இன் நிலையில் குறித்த உப அஞ்சல் நிலையத்தில்பதிலீடு எவரும் நியமிக்கப்படாத நிலையில் வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் உள்ள உப தபால் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக குறித்த தடங்கல் ஏற்பட்டுள்ளது
கடந்த எட்டாம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் காலப்பகுதி முடிவடைந்த நிலையில் தற்போது எமது உத்தியோகத்தர்களால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி தேர்தல் செயலகத்தின் அனுமதிடன் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை ஆராய்ந்து வருகிறோம்.
வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் நேரடியாக குறித்த தபால் நிலையத்துக்குச் சென்று தமது வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


