டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!.
Tuesday, December 10th, 2024
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 858 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,927 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
000
Related posts:
இரண்டு கோடி 50 இலட்சம் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பம்!
தனியார் மயமாகிறது மக்கள் வங்கி – இலங்கை வங்கிகள்?
எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!
|
|
|


