இரண்டு கோடி 50 இலட்சம் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று ஆரம்பம்!

Tuesday, January 3rd, 2017
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இது அடுத்த மாதம் 12ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜனவரி 21ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறும்.

இம்முறை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக 62 ஆயிரம் மதிப்பாட்டாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்திலும் பார்க்க இந்த எண்ணிக்கை அதிகமாகும். இரண்டு கோடி 50 இலட்சம் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். வரலாற்றில் ஆகக்கூடுதலான மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

a2d2c024763bd281bef425ce8615c762_XL

Related posts:


புதிதாக அமைக்கப்பட்ட சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!
ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் - நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆ...