‘டிட்வா” புயல் – இன்றுடன் இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!
Saturday, November 29th, 2025
……..
” டிட்வா” புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.
இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.
மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
…….
2025.11.29 සෙනසුරාදා පෙ.ව. 8.00
දැනටමත් සඳහන් කළ පරිදි, ටිට්වා සුළි කුණාටුව චුන්ඩිකුලම් හි කේන්ද්රගත වී මුහුද දෙසට ගමන් කරමින් සිටී. දැනට (පෙ.ව. 8.00) මධ්යයේ 30% ක් මුහුද දෙසට ගමන් කර ඇත.
අද දහවල් වන විට එය සම්පූර්ණයෙන්ම මුහුද දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
උතුරු සහ නැගෙනහිර පළාත්වල බොහෝ ප්රදේශවල අද මධ්යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත. විශේෂයෙන් උතුරු පළාතේ බටහිර ප්රදේශවලට තද වැසි ලැබීමට ඉඩ ඇත.
උතුරු පළාතේ ජලාශවලට අද දිනයේදීත් ඉහළ ජල මට්ටමක් ලැබෙනු ඇත. එබැවින්, ප්රධාන භූමියේ පහත් බිම් ප්රදේශවල ජනතාව විමසිලිමත් වීම අවශ්ය වේ.
වයඹ පළාතට අද දින තද වැසි ලැබීමට ඉඩ ඇත.
මධ්යම සහ බටහිර පළාත්වල ප්රදේශ කිහිපයකට මධ්යස්ථ වැසි ලැබීමට ඉඩ ඇත.
අද දිවයිනේ සෙසු ප්රදේශවල කාලගුණය ක්රමයෙන් යහපත් වනු ඇත.
– නාගමුතු ප්රදීපරාජා –
Related posts:
|
|
|


