டிஜிட்டல் மயப்படுத்தப்படும் ஓய்வூதியத் திணைக்களம்!

Saturday, January 18th, 2025

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்றை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு   அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பில் பல அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து துறைகளின் கீழ் இதற்கான பணிகள் இடம்பெறும்.

ஓய்வூதியத் துறையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை ஓய்வு பெற்றவர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் நட்பு முறையில் வழங்குவதே இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக புதிய இணையத்தளமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகையிரதம், பேருந்துகளில் பயணிக்கும் ஓய்வூதியகாரர்களுக்கு பயண சீட்டு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

விதவை மற்றும் அனாதை திட்டத்திற்கான பதிவு மற்றும் தகவல் அமைப்பு, பொது ஊழியர் வருங்கால வைப்பு நிதி செயல்முறை, ஓய்வூதியதாரர் இறப்பு சான்றிதழை இலகுவாக பெறும் முறை என பல்வேறு விடயங்கள் புதிய டிஜிட்டல் கட்டமைப்பில் உள்வாங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்ச...
புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தில் திருத்தம் - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...
ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் - 8 ஆம் திகதி திங...